“சேஷா” என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு சர்வதேச கேன்ஸ் விருது.

சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் – 2024 திரைப்பட விழாவில் இலங்கையில் உருவான நடனத்தை மையமாகக் கொண்ட திரைப்படமான “ஷேஷா” கேன்ஸ் விருதை வென்றுள்ளது.

விருது வழங்கும் விழாவில் ‘BEST DANCE FILM’ பிரிவில் இந்த கேன்ஸ் விருது கிடைத்துள்ளது.

“ஹெலவின் அருவமான மூலாதாரம்” என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஷேஷா” இசுரு குணதிலக்கவினால் இயக்கப்பட்டது. சமந்த குமார கமகேவின் திரைக் கதையில் உருவாகியுள்ளது.

மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்கிரமசிங்க இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன் உமாலி திலகரத்ன உட்பட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் இலங்கையின் பாரம்பரிய நடனம் மற்றும் தந்தை-மகன் உறவைச் சுற்றி வருகிறது.

அரசியல் ரீதியாக நனவிலி மற்றும் கலாச்சார ரீதியாக சீரழிந்த சமூகத்தில் தங்கள் கலையை தங்கள் வாழ்க்கையாக பாதுகாக்க முயற்சிக்கும் ‘குருன்னான்சே’ (குரு) மற்றும் அவரது அன்பு மகனை மையமாகக் கொண்ட பாச கதையாக இது விளம்பரப்படுத்தப்பட்டது.

தீவுகளுக்கு அப்பால் நமது கலாசாரத்தை எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த “ஷேஷா” குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என இயக்குநர் இசுரு குணதிலக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.