சின்னத்திரை நடிகை மீது பாலியல் வன்கொடுமை : ஆறு பேர் கைது.

சென்னை: சின்னத்திரை நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

30 வயதான அந்த நடிகை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் அவர் தங்கியுள்ளார். தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் அவர், புதன் கிழமை அன்று, படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.

அவரது உறவினர் பணிநிமித்தமாக ஹைதராபாத் சென்ற நிலையில் திடீரென வீட்டுக்குள் ஆறு பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களில் முருகேசன் என்பவர் தன்னுடன் வந்த இருவரை வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அவர் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். ஆறு பேரும் வீட்டை விட்டுச் சென்ற பிறகு வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார் அந்த துணை நடிகை. இதையடுத்து ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

அப்போது, கைதான முருகேசன் நடிகையின் அண்டை வீட்டில் குடியிருப்பதும் பிரபல திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.