கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் பாரதிய ஜனதாவுக்குக் குறைவான இடங்கள்.

பாரதிய ஜனதா நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்திருக்கிறது.

பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறமுடியாமல் போகலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்த்தரப்பு I.N.D.I.A கூட்டணி அதற்குக் கடும் போட்டி கொடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

பாரதிய ஜனதாக் கட்சிக்குக் கிடைத்த இடங்கள்

2024 தேர்தல் – 240
2019 தேர்தல் – 303

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 272 இடங்கள் தேவை. பாரதிய ஜனதா, இம்முறை கூட்டணிக் கட்சிகளோடு அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலை.

இவ்வாண்டுத் தேர்தலில் உத்திரப் பிரேதசம், மஹாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் குறைவான இடங்கள் கிடைத்தன.

உத்திரப் பிரேதசம்

மொத்த இடங்கள் – 80

பாரதிய ஜனதாக் கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 62ஆக இருந்தது. அவற்றில் பாரதிய ஜனதாக் கட்சி மட்டும் 60 இடங்களைக் கப்பற்றியிருந்தது.

மஹாராஷ்டிரா

மொத்த இடங்கள் – 48

பாரதிய ஜனதாக் கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றியது.

அவற்றில் பாரதிய ஜனதாக் கட்சி 9 இடங்களை மட்டும் கப்பற்றியுள்ளது. 2019 தேர்தலில் அந்த எண்ணிக்கை 23ஆக இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதைவிடச் சிறப்பாகச் செய்துள்ளது.

மொத்தம் 232 இடங்களை வென்ற கூட்டணி, குறிப்பாக தென் இந்தியாவில் அதிக வாக்குகளைப் பெற்றது.

தமிழ்நாடு

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, போட்டியிட்ட அனைத்து 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

கேரளா

ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றியது.

பாரதிய ஜனதா கூட்டணி அங்கு முதல்முறையாக ஓர் இடத்தைப் பிடித்தது.

கர்நாடகா

28 இடங்களில் 19 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.

காங்கிரஸ் முன்பைக் காட்டிலும் கூடுதல் இடங்களைப் பிடித்துள்ளது. அது 9 இடங்களைப் பெற்றது. கடந்த தேர்தலில் அது ஓர் இடம் மட்டுமே பிடித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.