சுயநிர்ணய உரிமைக்காக யாழில் இன்று சர்வசன வாக்கெடுப்பு.

இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பொது உரையுடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு யாழ்.செல்வநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி விவாதிப்பதற்கான முதலாவது அறிஞர் உரையும் வாக்கெடுப்பும் இதுவாகும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் குழுவும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஐக்கிய இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வையே வடக்கின் பெரும்பான்மை கட்சிகள் கோரியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.