காணாமல்போன அனலைதீவு மீனவர்கள் இருவரும் தமிழகத்தில் கரை சேர்ந்தனர்!

யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர்.

அனலைதீவில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு நண்டு வலைக்குப் புறப்பட்ட இருவர் கரை திரும்பவில்லை என அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோவால் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

35 மற்றும் 44 வயதுடைய இரண்டு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்த நிலையில் இன்று மாலை நாகைபட்டினத்தில் அவர்கள் கரை அடைந்துள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக படகு அலையில் அடித்துச் செல்லப்பட்டே இந்தியாவின் தமிழகத்தின் நாகைபட்டினம் கடற்கரையை அவர்கள் அடைந்துள்ளனர் என்று தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.