டிப்பர் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டம், சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேனையூர், 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வி.விதுர்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே மோதியுள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையை சம்பூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

மரணமடைந்தவர் பிறவிக் குறைபாடு உடையவர் என்பதுடன் இறந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலையில் மரணமடைந்தார் என்று சம்பூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.