17 வயது மாணவியின் காதலனே , நண்பர்களிடம் சொல்லி காதலியை கூட்டு பலாத்காரம் செய்யவைத்த கொடூரம்

17 வயதுடைய பாடசாலை செல்லும் தனது காதலியை வன்புணர்வு செய்த காதலனையும் , பலாத்காரம் செய்த 19-21 வயதுடைய காதலரின் 5 நண்பர்களையும் ஹன்வெல்ல பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்ய முயன்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்திகளின்படி, சம்பவம் பின்வருமாறு.

17 வயதுடைய பாடசாலை மாணவி ஹன்வெல்ல கீழ் கொஸ்கம பிரதேசத்தில் வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் (21) தனது சிறிய தாயுடன் நகரில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்த அவர், இதற்கிடையில் புத்தக கடைக்கு செல்வதாக கூறி காதலனை சந்திக்க சென்றுள்ளார்.

காதலன் அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவள் அங்கிருந்து வெளியேறி போகும் போது , அவனது நண்பர்களுக்கு போன் செய்து அவளை அழைத்து சென்று என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்துள்ளான்.

காதலனின் பேச்சை அனுமதியாகக் கொண்டு ஜல்தர எனும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மயானம் ஒன்றின் அருகில் இளைஞர்கள் குழு ஒன்று கூடியதோடு , மாணவியை தேடி அழைத்து வர ஒருவன் சென்றுள்ளான். வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை அம்புள்கம சந்திக்கு அருகில் மாணவியை தேடிச் சென்றுள்ளான் . மோட்டார் சைக்கிளில் வந்தவன் , மாணவியின் காதலரின் நண்பர் என்றும், வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, மயானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அப்போது, ​​மாணவியின் எதிர்ப்பையும் மீறி , அந்த 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யும் வரை ஏஎனையோர் வெளியே நின்று எவராவது வருகிறார்களா என கண்காணித்துள்ளனர்.

கூட்டு பலாத்காரத்தின் பின்னர் மாணவியை அழைத்து வந்த இளைஞன் மீண்டும் ஹன்வெல்ல ஆட்டிகல சந்திக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் மாணவி வீட்டிற்கு செல்வதற்காக அவர்களிடம் பணம் கேட்டதாகவும், 40 ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் தெரியவந்தது.

மாணவி வீட்டுக்குச் செல்ல முடியாமல் அழுது கொண்டிருந்த போது, ​​அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசார் நிறுத்தி விசாரித்த போது , சம்பவம் தொடர்பில் மாணவி போலீசாரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். அதன்பின் ஒரு ஆட்டோவில் மாணவியை ஏற்றிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்க பொலிஸார் சென்றுள்ளனர்.

மாணவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மோட்டார் சைக்கிளில் சுடுகாடு உள்ள இடத்துக்கு அழைத்துச் சென்ற பிரதான சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான இந்த இளைஞன் தெடிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரை விசாரித்த பின் ஏனைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் மற்றுமொரு பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் செய்திகள் இங்கே

பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள்!

கள்ளக்குறிச்சி சம்பவம்: முக்கிய நபர் கைது!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு! உயிருக்கு போராடும் 20 பேர்

T20 உலககோப்பை; வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம்.

யூரோ கால்பந்து: துருக்கியை வீழ்த்தியது போர்ச்சுக்கல் அணி!

இராமேஸ்வரத்தில் கைதான புத்தளம் மீனவர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவு இளைஞர் படுகொலை: பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிப்பு!

ஊடகவியலாளர் தனுஷ்க செனவிரத்னவை தாக்கிய கும்பலில் சிலர் சரண்

Leave A Reply

Your email address will not be published.