சம்பந்தரின் புகழுடல் இன்று யாழிலிருந்து விமானம் மூலம் திருகோணமலைக்கு … (படங்கள்)
சம்பந்தனின் புகழுடல் இன்று காலை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
மறைந்த சம்பந்தனின் புகழுடல் நேற்று காலை கொழும்பில் இருந்து விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் முற்பகல் 10.15 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது சம்பந்தனின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் செலுத்தப்பட்டதோடு தலைமைக் காரியாலத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அதன் பின்னர் இரா.சம்பந்தனின் புகழுடல் யாழ். நகர் பகுதியூடாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலய பட இணைப்பு



















































