கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா சமூக தொற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண குடாநாடானது பெருமளவு கடல் பிரதேசத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும் நமக்கு அண்மைய நாடான இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் கொரோணாதொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது . தென்இந்திய மீனவர்களின் வருகையின் மூலம் எமது வடக்கு பிரதேசத்தில் கொரொணா தொற்றுவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலையாக அமையும். எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடற்கரையை அண்டியுள்ள பகுதியில் உள்ள மக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முதல் பருத்துறை பகுதியில் இந்திய மீனவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். எனவே அதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறா வண்ணம் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் இப்பகுதி மக்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல இன்னல்களை அனுபவித்த மக்கள் மீண்டும் கொரோணாதொற்று மூலம் இப்பகுதி மக்கள் பாதிக்காத வண்ணம் செயற்பட வேண்டியது அனைத்து யாழ் மாவட்ட மக்களின் பொறுப்பாகும. குறிப்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு மக்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.