முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கலந்து கொண்ட ஒரு விழாவிலிருந்து தேர்தல் ஆணையம் அவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது. இந்த விழா பொலன்னறுவையில் உள்ள புலத்திசி புத்தி மண்டபத்தில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வாக நடைபெற இருந்தது.

மைத்ரிபால சிறிசேனாவும் இந்த விழாவில் கலந்து கொண்டு பரிசில்களை வழங்க இருந்தார். ஆனால் அந்த நிகழ்வில் கலந்து கொள்வது தேர்தல் கால சட்டத்தின் பிரகாரம் தவறான ஒரு செயல் என அறிவுறுத்தப்பட்டமையால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அவ் விழாவிலிருந்து அவர் வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி வெளியேறும் வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கேயே இருந்தனர்.

அவர் சென்ற பிறகு, விழா தொடர்ந்தது.

Comments are closed.