டில்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டில்லி அணியின் 5வது வெற்றி.

சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி கப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுபை தேர்வு செய்தார்.டில்லி அணிக்கு ஹெட்மயர் (45), ஸ்டாய்னிஸ் (39), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (22) கைகொடுக்க, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு டிவாட்டியா (38), ஜெய்ஸ்வால் (34) ஆறுதல் தர, 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. டில்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட் கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.