உயர்தரம், தரம் 5 பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு.

உயர்தரம், தரம் 5 பரீட்சார்த்திகளுக்கு
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நிலையைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக ஜி.சீ.ஈ. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலைமை உள்ளிட்ட பிற தகவல்களைப்  பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாணவர்களின் தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பத்திரத்தில் சேர்க்க வேண்டும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் info.moe.gov.lk  என்னும் இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தகவல்களைப் பதிவிட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜி.சீ.ஈ. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இம்முறை தோற்றவுள்ள சகல மாணவர்களும்  பாதுகாப்பான முறையில் பரீட்சைகளுக்குத் தோற்றும் வகையில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தி வருவதோடு, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்களும், வேறு பிரதேசங்களிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு வருகை தரும் மாணவர்களும் இது தொடர்பில் அதிக கவனம் எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயினும், குறித்த தகவல்களை வழங்காது பரீட்சைகளுக்குத் தோற்றுவதில் எவ்வித தடங்கலும் இல்லை எனவும் சகல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.