சென்னை அணி மீண்டும் தோல்வி அடைந்தது.

டுபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, பெங்களூர் அணிகள் மோதின. பெங்களூர் அணியில் மொயீன் அலி, முகமது சிராஜ் நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ், குர்கீரத் சிங் மன் தேர்வாகினர்.

சென்னை அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஜெகதீசன் இடம் பிடித்தார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற   பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

பெங்களூர் அணிக்கு கப்டன் கோஹ்லி (90), தேவ்தத் படிக்கல் (33) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு (42), ஜெகதீசன் (33) நம்பிக்கை அளித்தனர். கப்டன் தோனி (10), வாட்சன் (14), டுபிளசி (8) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்களை  மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூர் சார்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

Leave A Reply

Your email address will not be published.