இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் தங்காலை பகுதிகளில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை அமைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

கடற்படையினரால் உருவாக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட குறித்த அருங்காட்சியகம், காலி கடற்கரையை அண்டியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை குறித்த அருட்காட்சியகம் கவர்ந்துள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.


குறித்த அருங்காட்சியகத்தின் அனைத்து கட்டுமானங்களும் கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, சீமெந்து மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களினால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.

கடலுக்கடியில் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருட்காட்சியகத்தை, நீந்தக்கூடியவர்களும் சுழியோடிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.