சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3.6 கிராம் ஹெரோயினை சூட்சுமமான முறையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், போதைப்பொருள் விற்பனையிலும் குறித்த பெண் ஈடுபட்டுள்ளமையினாலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை காரணம் காட்டி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மாளிகாகந்த நீதவானால் இந்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையினால், நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.