இன்று இரவு 10 மணி முதல் கம்பஹ மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு

கம்பஹா மாவட்டம் முழுவதும்
இன்று இரவு முதல் ஊரடங்கு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், பேலியகொட மீன் சந்தையில் இன்று பெருமளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Info Press Re

Leave A Reply

Your email address will not be published.