பிணைமுறி மோசடி குறித்து ரணில், மைத்ரியிடம் வாக்குமூலம்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மத்திய வங்கி பிணைமுறி குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்த குமார் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.