இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட இராணுவத்தளபதியினால் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைகளில் ஒன்றாகிய வீடற்ற வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் செயற் திட்டத்தின் ஒரு அங்கமாக இன்றைய தினம் ஏழு வருடங்களாக ராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J252
பலாலி தெற்கு வசாவிளானில்
இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய வினால் இராணுவ பெண்மணியிடம் கையளிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஊடகப் பிரிவில் கடமையாற்றி வருகின்றார் எனினும் அவருக்கு நிரந்தர வீடு இல்லாததன் காரணமாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எடுத்தமுயற்சியின் பயனாக குறித்த பெண்மணிக்கு இன்றைய தினம் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது குறித்த நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்

வீடு கையளிக்கப்பட்ட பின்னர் மரக்கன்று ஒன்றும் ராணுவ தளபதியின் நாட்டிவைக்கப்பட்டதோடு வீட்டு உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் வழங்கிவைக்கப்பட்டது

Comments are closed.