மேர்வின் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு.

கிரிபத்கொடை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணியைப் போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சில்வா உட்பட மூவரை மே மாதம் 19 ஆம் திகதி வரை மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ராய் பெரேரா ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, மஹர நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அடுத்த விசாரணையின்போது இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.