வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியது!
வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.

