கொல்கத்தா அணியை வீழ்த்தியது குஜராத்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்ச்சியில் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும், சிங் 1 ரன்களும் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.