வெடிகுண்டு பீதியால் கொழும்பு ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு; வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைப்பு

கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் திடீரென ஏற்பட்ட வெடிகுண்டு பீதியால் சோதனை நடத்தப்பட்டது.
அந்த தூதரகத்திற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் மடிக்கணினி ஒன்றை ஒப்படைத்துவிட்டு உடனடியாக வெளியேறியதால் இந்த சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த குருந்துவத்தை பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு இணைந்து உடனடியாக தூதரகத்தை சோதனை செய்தனர்.