யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை: விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு அறிவுறுத்து!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறு யாழ். பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணை விதிகளை மீறியும் செயற்படுகின்றனர் என்று மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையிடுமாறு யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளது.