ஆறு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம்: ஊழல் விசாரணைகள் முடிவடைந்தன.

முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவை இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.
குருநாகல், கண்டி, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவர்களில் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.