போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இந்த ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 15 இடங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ரேடாா்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. வியாழக்கிழமை இரவில் ஜம்மு, பதான்கோட், உதம்பூா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்த நிலையில், அந்த முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி
இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் சர்வதேச எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.