தையிட்டியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி.

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டக் களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் , அவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.