செம்மணியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்.

யாழ். அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி மயானத்தில் மனிதச் எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அப்பகுதியில் நீதிவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அவ்வேளை, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அங்கு இன்று அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.