100 கோடி ரூபா இழப்பீடு கோரி சரவணபவனுக்கு வக்கீல் நோட்டீஸ்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் 100 கோடி ரூபா இழப்பீடு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி உப தலைவர் சண்முகநாதன் ஜெயந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது தமிழரசுக் கட்சி சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வாக்குகளைப் பெறுவதற்காக மதுபானம் வழங்கப்பட்டது என்று அன்று பொதுவெளியில் சரவணபவன் பொய்யாக உரையாற்றியமையால் ஏற்பட்ட இழப்புக்குப் பரிகாரமாக 100 கோடி ரூபா வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதனை 14 தினங்களுக்குள் வழங்கத் தவறினால் இதற்கான வட்டிப் பணம் மற்றும் வழக்குச் செலவுடன் வழங்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று 2025-05-14 அன்று சட்டத்தரணி கீர்த்தனா கமலச்சந்திரன் ஊடாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2025-05-12

Leave A Reply

Your email address will not be published.