நோயாளியைக் கொல்ல உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஆடியோ: மகாராஷ்டிராவில் மருத்துவர் மீது வழக்கு

நோயாளியைக் கொல்லுமாறு மருத்துவர் உத்தரவிட்டதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடியோ சர்ச்சை
மகாராஷ்டிரா, லாத்தூர் உட்கிர் அரசு மருத்துவமனையில் கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே. இவர் ஜூனியர் டாக்டருடன் போனில் பேசிய ஆடியோ சமீபத்தில் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

அதில் மருத்துவமனையில் படுக்கை நிரம்பி விட்டதால், சிகிச்சையில் இருக்கும் ஒரு கொரோனா நோயாளியை கொன்று விடுமாறு ஜூனியர் டாக்டரிடம் சசிகாந்த் தேஷ்பாண்டே கூறுகிறார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கொரோனா நோயாளியான கவுசர் பாத்திமா என்ற பெண்ணின் கணவர் தயாமி(53) போலீஸில் புகாரளித்தார்.

தீவிர விசாரணை
இந்த புகாரை அடுத்து போலீசார் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதேபோல் மற்றொரு டாக்டர் டாங்கேவுக்கும் போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.