கொழும்பில் பெண்ணின் சடலம் மீட்பு! – அடையாளம் காணப்படவில்லை.

கொழும்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்துக்கு அருகில் இருந்து நேற்று மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

60 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும், அவர் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமானது அடையாளம் காண்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.