இ.தொ.காவின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது என்.பி.பி.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்துவின் தலைமையில் இன்று ஹங்குரன்கெத்த பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பின் ஊடாக ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன தெரிவானார்.

அதையடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளைப் பெற்று உப தவிசாளரானார்.

ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்காக 42 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உறுப்பினர் பங்கீட்டு விவரம் வருமாறு:-

* தேசிய மக்கள் சக்தி – 20
* இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – 2
* ஐக்கிய தேசியக் கட்சி – 3
* பொதுஜன ஐக்கிய முன்னனி – 1
* ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 4
* ஐக்கிய மக்கள் சக்தி – 9
* சர்வஜன அதிகாரம் – 1
* சுயாதீனக் குழு 1 – 1
* சுயாதீனக் குழு 2 – 1
……………….

Leave A Reply

Your email address will not be published.