9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்  தொடர் நடைபெற்று வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்  மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லார்ட்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. துவக்கமே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பந்து வீச்சில் டெல்லி அணியின் துவக்க துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  இதனால், டெல்லி அணியின் ஓட்ட வேகம் துவக்கத்திலேயே தடை பட்டது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி துடுப்பாட்டம் செய்தது.  பந்து வீச்சை பொருத்தவரை மும்பை அணியில் அதிகபட்சமாக பவுல்ட் , பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்குடன் துடுப்பாட்டத்தை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.