வவுனியா சேக்கிழார் மன்றத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்ற அலுவலகத்தில் வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி திருமாலினி முன்னிலையில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.
18 ஆவது ஆண்டை நோக்கிச் செல்லும் வவுனியா சேக்கிழார் மன்றத்தின் நிர்வாகத் தெரிவு மன்றத்தின் தலைவர் க.ஐயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

அந்தவகையில் சேக்கிழார் மன்றத்தின் புதிய தலைவராக முன்னாள் அதிபரும் வவுனியா மத்தியஸ்த சபையின் முன்னாள் தவிசாளருமான சி.வரதராசா தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக ஆசிரியரும் வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான கி.வசந்தரூப னும், உப தலைவராக மத்தியஸ்த சபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான திருமதி சி.திவியாவும், உப செயலாளர்களாக ஓய்வுநிலை விரிவுரையாளர் செ.சத்தியநாதன் மற்றும் பா.சுந்தரராஜனும், பொருளாளராக முன்னாள் மத்தியஸ்த சபை உறுப்பினரும் ஓய்வு நிலை உத்தியோகத்தருமான தா.சலசலோசனும், கணக்காய்வாளராக நா.தியாகராஜாவும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கேசலா, குலேந்திரன், கு.கோகுலன், சுஜித்தா, நாகராஜா, மோகனதாஸ், சி.கஜேந்திரகுமார், துரைராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன், போசகர்களாக க.ஐயம்பிள்ளை, தணிகாசலம், நா.வில்வராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
