கண்டியில் கோர விபத்து! இருவர் பரிதாப மரணம்!!
கண்டியில் ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹசலக்க – ஹெட்டிப்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உடவலவில் இருந்து ஹெட்டிப்பொல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும், சைக்கிளில் பயணித்த வயோதிபரும் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பரவதர்ன மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரும், 73 வயதுடைய வயோதிபரும் ஆவர்.
இந்த விபத்து தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
