கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி மரணம்!

கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹடபிட்டிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கம்பளை 58 வயதுடைய கட்டுமானத் தொழிலாளி ஆவார்.

இவர் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கால் தவறி கீழே வீழ்ந்துள்ள நிலையில் ஏனைய தொழிலாளிகளின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.