காரைதீவில் 7 மாணவர்களுக்கு 9 ஏ.

2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் காரைதீவு சார்பாக 7 மாணவர்கள் 9 ஏ சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காரைதீவு இ.கி.ச .பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவிகள் காரைதீவு பாடசாலைகளில் அதிகூடிய 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

ஜே.சதுஸிகா, பி.சபித்தா, எஸ்.ஹருஸ்ஸியா, எஸ்.மோபிகா, யூ.லோவித்யா, வை.வைசாலி ஆகிய ஆறு மாணவிகளே 9 ஏ பெற்றவர்கள் ஆவர்.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் எஸ்.றவீன் என்ற மாணவன் மாத்திரம் 9 ஏ சித்தி பெற்றுள்ளார்.

இதைவிட வேறெந்த பாடசாலைகளிலும் 9 ஏ சித்தி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2023 இல் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர்.

காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்திருந்தனர்.

விபுலானந்த மத்திய கல்லூரியில் 5 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.