வவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36 ஆவது வீர மக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகர சபையின் மேயருமான சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.