நடமாடும் வர்த்தகர்களுக்கான அனுமதி

ஊரடங்கு காலப்பகுதியில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டவாறு அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவையின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திட்டத்தை இன்றைய தினத்துக்குள் தயாரித்து முடிக்க எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

´இதற்கு முன்னர் மார்ச் முதல் மே, ஜூன் மாதந்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். விசேடமாக மருந்துகள், உணவு பொருட்கள், மரக்கறி, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க இன்று திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். அதற்காக தெரிவுச் செய்யபடுவோர் ஏதேனும் வியாபாரத்தில் ஈடுப்பட்டமையை கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியம். அல்லது பதிவுச் செய்யப்பட்ட வியாபாரியாகவும் அவர் இருக்க வேண்டும்.´

மொத்த வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை போக்குவரத்து செய்வதற்கான இயலுமை உள்ளதா?

´உணவு பொருட்கள், மரக்கறி வகைகள், முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்து குறித்த இடங்களுக்கு வருகைத்தர முடியும். அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படும். வீதிதடைகளில் கடமையில் உள்ள பொலிஸாருக்கும் அது குறித்து அறிவிக்கப்படும்.´

Leave A Reply

Your email address will not be published.