நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் சாவு!

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம், நொச்சியாகம பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.