செம்மணியில் 141 – நேற்றும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக ஆறு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 31ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது ஆறு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நான்கு மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் 141 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளிலிருந்து 130 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.