செம்மணி மனிதப் புதைகுழி: சான்றுப்பொருள்களைப் பார்வையிட 200 இற்கும் மேற்பட்டோர் வருகை!

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப்பொருள்களைப் பார்வையிடக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தமாக 200 இற்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தார்கள்.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் உள்ளிட்ட பிற சான்றுப் பொருள்கள் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணி வரை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 54 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் தனிமனிதர்கள் சாராத சான்றுப்பொருள்கள் தவிர்க்கப்பட்டு, தனிமனிதர்களோடு தொடர்புடைய 43 சான்றுப் பொருள்கள் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட்டன.

சான்றுப்பொருள்களைப் பார்வையிடக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனச் சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தார்கள். எனினும், எதுவிதமான சான்றுப்பொருள்களும் நேற்றைய அடையாளப்படுத்தல் நடவடிக்கையின் போது அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.