கைதான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நாடளாவிய போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரச நிலத்துக்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

இன்று காலை நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.