அதிசொகுசு பஸ் மோதி ஒருவர் பரிதாப மரணம்.

புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பாதையைக் கடக்க முற்பட்டவர் மீது மோதியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மேற்படி நபர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

உயிரிழந்த நபர் 54 வயதுடைய நொச்சியாகம, மொரவக கந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.