யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்.
ஒப்புக்கொள்ளப்பட்ட எம்.சி.ஏ. கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று மேற்கொண்டது
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது
இதன்போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நீக்கிவிடப்பட்ட 20 சதவீதத்தை உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு, மக்களாட்சி அரசு பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருகின்றது, அதிகரிக்கப்பட்ட வரவு – செலவு முன்மொழிவுகளுக்குப் பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லையோ? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர்.









