அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்கிரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில்
விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றுப் பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நோய் நிலையைப் பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத்
தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணிலைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் முன்னர் பரிந்துரைத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
