கோர விபத்தில் இருவர் மரணம்!
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
