பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி மகேந்தி சடலமாக மீட்பு!
முன்னாள் போராளி மகேந்தி என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய இராமப்பிள்ளை கமலராசா (மகேந்தி) என்பவர் நேற்று அவரது வீட்டுக்கு முன்பாகவுள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
