ஐ.தே.கவின் ஆண்டு விழா செப்டெம்பர் 21ஆம் திகதி.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்குக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவக் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
………..

Leave A Reply

Your email address will not be published.