மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஹதரலியத, பொல்வத்த பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 2 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தார்.

தனது காதலியைச் சந்திக்க வயலுக்குள்ளால் சென்று கொண்டிருந்தபோது பன்றிக்கு வைத்த மின்சார பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் இறந்தவர் கண்டியில் உள்ள ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவராவார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தனது கைத்தொலைபேசியில் பேசியபடி, தனது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள காதலியான சக மாணவியொருவரின் வீட்டை நோக்கி வயலுக்குள்ளால் சென்றுள்ளார்.

அத்தோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று, மின்சாரம் தாக்கி ஒரு முனகல் சத்தத்துடன் இளைஞன் வயலில் விழுந்துள்ளார்.

முனகல் சத்தத்தின் பின்னர் காதலனின் தொலைபேசியிலிருந்து எந்த சத்தமும் வராததையடுத்து, அவன் ஏதோ பிரச்சனையில் சிக்கி இருக்கலாம் என்று நினைத்த காதலி, வயல் வெளியூடாக தேடிக் கொண்டு வந்தார்.

காதலனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தியபடி, தனது கைத்தொலைபேசி வெளிச்சத்தில் தேடிக் கொண்டு வந்துள்ளார்.

காதலன் வயல் வெளியில் விழுந்து கிடப்பதை அவதானித்து அந்த பகுதிக்கு ஓடிச்சென்ற காதலியும் மின்சார தாக்குதலுக்கு இலக்கானார். எனினும், அவருக்கு கடுமையான பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

அத்தோடு பொலிசாரின் விசாரணையில் நெல் வயல் நான்கு நபர்களுக்கு சொந்தமானது என்றும், அவர்கள் அனைவரின் சம்மதத்துடனும்,

அப்பகுதியில் உள்ள ஒருவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நெல் வயலில் மின்சார கம்பி ஒன்றை பொருத்தியது தெரிய வந்ததுள்ளது..

நான்கு உரிமையாளர்கள் மற்றும் மின் இணைப்புகளை அமைத்த நபரிடம் ஹதரலியத பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.