விபத்தில் காயமடைந்தவர்களில் ஏழு பேர் ஆபத்தான நிலையில்!

எல்ல பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று இரவு சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின்னர் மேலும் ஒருவரை அல்லது இருவரை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க வேண்டியிருக்கும் என்றும் பதுளை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.